தற்போது நாட்டில் உயர்தரப் பரீட்சை நாடு பூராகவும் நடந்துவரும் நிலையில் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் ஒரு பரீட்சை நிலையமும் பரீட்சை எழுதுவதற்கு தயார் செய்து கொடுக்காமல் முசலிப் பிரதேச மாணவர்கள் வேறு பிரதேசங்களுக்கு சென்று பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முசலிப் பிரதேசத்தில் ஏழு பாடசாலைகளில் மாணவர்கள் உயர்தரம் கற்கின்றார்கள் இதில் ஒரு தமிழ் பாடசாலையும் உள்ளடக்கின்றது இந்த ஏழு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தான் பரீட்சை எழுத வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.
மன்னார் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வினவிய போது முஸ்லிம் பாடசாலைகளில் பரீட்சை நடத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டாம் தவணை பரீட்சை நடைபெறுவதால் அங்கு பரீட்சை நிலையம் ஒதுக்க முடியாத நிலை உள்ளதாக சொல்கின்றனர்.
அப்படியென்றால் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் பாடசாலைகளில் ஒன்றை தெரிவு செய்து உயர்தரப் பரீட்சையை நடத்தியிருக்கலாம் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மன்னார் மாவட்ட கல்வி அதிகாரிகள் முசலிப் பிரதேச கல்வி விடயத்தில் அக்கறை செலுத்துவது இல்லையென்றும் இங்கு அதிகம் முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதனால் அவர்கள் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏ.எம்.றிசாத்
No comments:
Post a Comment