நிரந்தர நியமனங்கள் கிடைக்கப் பெறாத கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட முயற்சி இன்று (07.08.2019) கல்வி அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், கோடீஸ்வரன் ஆகியோர் இணைந்து இராஜங்க கல்வி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.
இதன்பின்பு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கான ஒரு வேண்டுகோளை விடுக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment