ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவையொட்டி ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015 பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகளுக்கு அடுத்த படியாக சாந்த பண்டார உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment