கோட்லோஜ் முனிசாமி கோவிலை விகாரையாக்க முயற்சியா? சீண்டிப்பார்க்க வேண்டாம் விளைவுகள் மிக மோசமானதாகவிருக்கும் - ஆறுமுகன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

கோட்லோஜ் முனிசாமி கோவிலை விகாரையாக்க முயற்சியா? சீண்டிப்பார்க்க வேண்டாம் விளைவுகள் மிக மோசமானதாகவிருக்கும் - ஆறுமுகன் தொண்டமான்

நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் முனிசாமி கோவிலின் கற்சிலையை பிடுங்கி எறிந்து அங்கு பௌத்த கொடியை ஏற்றி மதவாத வெறித்தனத்தை கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், அங்குள்ள பௌத்த பிக்குவும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எம்மை சீண்டிபார்க்க வேண்டாம் எனவும், விளைவுகள் மோசமானதாகவிருக்கும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எமது பிரதேசத்தில் நாம் மத நல்லிணக்கத்தை பேணிவருகின்றோம். அனைத்து மதங்களையும் மதித்து சுதந்திரமாக செயற்ப்படுவதற்கு எவ்வித இடையூர்களும் இங்கு இல்லை. ஆனால் சில மதவெறிப்பிடித்த விசமிகள் பௌத்த மேலாதிகத்தை ஏனைய மதங்கள் மீது திணிக்க முற்படுகின்றனர். 

இதன் ஒரு பகுதிதான் நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் இந்து மக்களால் காலம் காலமாக வழிப்பட்டு வந்த முனிசாமி கோவிலின் சுவாமி சிலையை அகற்றி அங்கு பௌத்த கொடியை பறக்கவிட்டுள்ள சம்பவமாகும். 

இந்த விடயத்தில் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். இன, மத வேற்றுமைகள் கடந்து செயற்பட வேண்டிய காவல்த்துறையினர் மத வண்முறையினை கட்டவிழ்த்து விடுவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தினையும் அச்சத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டும்.

பெருந்தோட்ட பிரதேசங்களிள் மத வண்முறையை தூண்டும் வகையில் நடைபெற்றுவரும் பௌத்த மேலாதிகத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெட்டதெளிவாக கூறிவைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே எம்மை சீண்டிபார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுகின்றோம்.

இந்நிலை தொடர்ந்தால் விளைவுகள் மிக மோசமானதாகவிருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்பதையும் வலியுறுத்துக்கின்றோம் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment