காணி உரிமையாளர்களின் பூரண உத்துழைப்புடன், எவ்வித அநீதிகளும் இடம்பெறாமலேயே விளையாட்டு மைதானம் அமையப்பெறும் - நஸீர் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

காணி உரிமையாளர்களின் பூரண உத்துழைப்புடன், எவ்வித அநீதிகளும் இடம்பெறாமலேயே விளையாட்டு மைதானம் அமையப்பெறும் - நஸீர் எம்.பி

பிரதேசத்துக்குள் முடங்கிக் கிடக்கின்ற விளையாட்டு வீரர்களின் திறமைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அதற்கான பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு ஒரு விளையாட்டு மைதானம் ஒன்றில்லை. இதனால் அந்த வீரர்களின் திறமைகள் யாவும் எமது முடிங்கிக் கிடக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை 9 ஆம் பிரிவில் விளையாட்டு மைதானம் அமையவுள்ள புறத்தோட்ட காணி உரிமையாளர்களுக்கும், விளையாட்டுக் கழகங்களின் நிருவாகத்தினருக்கும், வீரர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (16) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காணி உரிமையாளர்களின் பூரண உத்துழைப்புடன் அவர்களுக்கு எவ்வித அநீதிகளும் இடம்பெறாமலேயே அந்த விளையாட்டு மைதானம் அமையப்பெறும். அதன் ஆரம்பக் கட்ட பணிக்கான மண் நிரப்பும் வேலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

கடந்த பல வருடங்களாக அறபா வித்தியாலய மாணவர்களின் இல்ல விளையாட்டு நிகழ்வுகளையும், விளையாட்டுப் பயிற்சிகளையும் முன்னெடுப்பதற்குக்கூட ஒரு விளையாட்டு மைதானம் ஒன்றில்லாமல் இருக்கின்றது. அதனால் அந்த மாணவர்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். எமது பிள்ளைகள்தான் அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்காகவே இந்த விளையாட்டு மைதானத்தை அமைக்கவுள்ளோம்.
எமது பிள்ளைகளின் திறமைகளை மாகாண மட்டத்துக்கும், தேசிய மட்டத்துக்கும் கொண்டு செல்லவேண்டி பொறுப்பும், அவர்களின் திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பொறுப்பும் பெற்றோர்களாகிய நமக்குள்ளது. அதற்காக நாம் அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புக்களையும், தியாகங்களையும் செய்துதான் ஆகவேண்டும். என்பதைப் புரிந்துகொண்டு இந்த மைதானப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

அறபா வட்டார பிரதேசத்தில் சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த வீரர்களின் திறமைகளையும் மாகாண மட்டத்துக்கும், தேசிய மட்டத்துக்கும் வெளிக்கொண்டு வரவேண்டி பாரிய பொறுப்பும் எனக்குள்ளது. எமது பிள்ளைகளின் திறமைகளை தேசிய ரீதியில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக பெறிய ஜூம்ஆப் பள்ளிவாசலினால் 3 ஏக்கர் காணி வழங்குவதற்கு அந்த நிருவாகத்தினர் முன்வந்துள்ளனர். அதேபோல் காணி உரிமையாளர்களாகிய நீங்கள் வழங்குகின்ற உத்துழைப்பின் மூலம்தான் இந்த மைதானத்தை மிகத்துரிதகதியில் அமைக்க முடியும் என்றார்.

இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ரீ.ஆப்தீன், சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

பைஷல் இஸ்மாயில், சிபான் முஹம்மட் 

No comments:

Post a Comment