வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு விசமிகள் தீ வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 2, 2019

வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு விசமிகள் தீ வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்தார்.

வாகரை பிரதேசத்தில் வாகரை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள காடுகளை சில விசமிகள் எரித்துள்ளனர். இதனால் காடுகள் எரிவதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதன்பிரகாரம் வாகரை பொலிஸார், வாகரை இராணுவம், வாகரை வனஇலகா அதிகாரி மற்றும் வாகரை பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தண்ணீர் மூலம் தீயினை அணைத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வாகரை பிரதேசத்திலுள்ள சில காடுகளை தீ வைத்து அழிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வாகரை பொலிஸார் ஈடுபட்டு வருவதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வாகரை பிரதேசத்திலுள்ள சில காடுகளுக்கு கடந்த சில நாட்களாக இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு வருகின்றது. இதனால் வாகரையில் உள்ள வனங்கள் முற்றாக அழிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment