எஸ்.எம்.எம்.முர்ஷித்
தேசிய போதைப் பொருள் வாரத்தை முன்னிட்டு வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாக வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலத்தில் போதைப் பொருள் பாவனையும் பாதிப்புக்களும் என்ற தலைப்பில் சித்திரப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment