மீலாத் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் ஓட்டமாவடி கோட்டத்தில் முதலிடம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2019

மீலாத் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் ஓட்டமாவடி கோட்டத்தில் முதலிடம்

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மீலாத் போட்டி நிகழ்ச்சிகளில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நடைபெற்ற கோட்டமட்ட மீலாத் போட்டியில் எமது பாடசாலையில் எட்டு மாணவிகள் முதலிடங்களையும், ஐந்து மாணவிகள் இரண்டாமிடங்களையும், இரண்டு மாணவிகள் மூன்றாமிடங்களையும் பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

குறித்த போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கும் மாணவிகளை தயார்படுத்திய ஆசிரியர்களான எம்.எம்.எம்.அஸ்மின், ஏ.எம்.றிஹானா, ஏ.ஜீ.எப்.சிபாயா ஆகியோர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment