பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிடின் மீண்டும் உண்ணாவிரதம் - கல்முனை விகாராதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிடின் மீண்டும் உண்ணாவிரதம் - கல்முனை விகாராதிபதி

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ணதேரரை, கல்முனை சிவில் சமூகப் பிரதி நிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கல்முனை சூரியகாந்தி சகவாழ்வு மன்றத்தின் உப தலைவர் இ.இராசரெத்தினம், செயலாளர் எஸ்.காந்தருபன், இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் செயலாளர் கே. நடராஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ்ப்பிரிவு தேசிய இணைப்பாளர் என்.எஸ். தயானந்தன், தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி.தர்மேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பேசிய ரன்முதுகல சங்கரட்ணதேரர் இப்பிரதேசத்தில் தன்னை ஒரு இனவாதியாக சித்தரிப்பதற்கு இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாகவும், தான் ஒரு இனவாதியல்ல எனவும் விளக்கினார்.

நாட்டில் சகல மக்களும் அவரவர்களுக்குரிய உரிமைகளைப்பெற்று சந்தோஷமாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்பதே தனது விருப்பம். 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முப்பது நாட்களில் தரம் உயர்த்தாது விட்டால் மீண்டும் போராட்டத்தை, ஆரம்பிக்க இருப்பதாகவும் கல்முனைக்கு வரும் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதியுடன் வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

பாண்டிருப்பு நிருபர்

No comments:

Post a Comment