கட்டளையை மீறி சென்ற இரண்டு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

கட்டளையை மீறி சென்ற இரண்டு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

வத்தளை, ஹூனுப்பிடிய பிரதேசத்தில் கட்டளையை மீறி சென்ற இரண்டு கார்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (11) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று அதிகாலை ஹூனுப்பிடிய கடற்படை சோதனைச் சாவடியில் வாகனம் ஒன்றை சோதனை செய்ய முற்பட்ட போது, அந்த வாகனம் கட்டளையை மீறி கடமையில் இருந்த கடற்படை வீரர் ஒருவரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளது. 

இதன்போது மற்றொரு வீரரால் அந்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின், மற்றொரு காரும் படையினரின் கட்டளையை மீறி செல்ல முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காரின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரண்டு சாரதிகளும் அதிக மது போதையில் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment