நாவலப்பிட்டி மகாவலி கங்கையில் இருந்து இளைஞன் ஒருவனின் ஜனாஸாவை மீட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை நான்கு மணியளவில் தனது நண்பர்களோடு மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ள நிலையில், மகாவலி கங்கையின் சேலம்பிரிஜ் பகுதியில் இன்று ( 11) காலை ஜனாஸாவாக பொலிஸார் மீட்டுள்னர்.
17 வயதுடைய நவலப்பிட்டி மாகும்புர பகுதியை சேர்நத முகம்மட் உஸ்மாத் என்ற இளைஞனே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜனாஸா நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக நிருபர் இராமச்சந்திரன்
No comments:
Post a Comment