மின்சாரத்தை தடையின்றி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

மின்சாரத்தை தடையின்றி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

அன்றாட தேவைக்கான மின்சாரத்தினை தடையின்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பருவ காலநிலையால் மழை கிடைக்கப் பெற்றாலும் மின்னுற்பத்தி செய்யப்படுகின்ற நீர்த்தேக்கங்களில் மின்னுற்பத்திக்கு தேவையான போதியளவு நீர் கிடைக்கப் பெறவில்லை என இதன்போது சுட்டிக் காட்டப்பட்டதுடன், சிக்கனமாக மின்சாரத்தினை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று அன்றாட தேவைக்கான மின்சாரத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கு மாற்று மின்சக்தி முறைமைகளை பயன்படுத்துவது தொடர்பிலும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது.

மின்வலு, மின்சக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment