கூட்டமைப்பும் கூட்டணியும் இணைந்து செயற்பட முடிவு - மனோ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

கூட்டமைப்பும் கூட்டணியும் இணைந்து செயற்பட முடிவு - மனோ தெரிவிப்பு

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாகக் கலந்துரையாடியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இணைந்து செயற்படுவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment