நாட்டிற்காக ஒன்றிணைவோம் ஜனாதிபதி செயலகத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் சுமார் 5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட சம்மாந்துறை வீரமுனை வண்டு வாய்க்கால் வீதி மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஸாத் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வீதியினை திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தனித்து விடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை வண்டு வாய்க்கால் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வைபவத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நகீர், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை சினேகபூர்வமாக சந்தித்தனர்.
No comments:
Post a Comment