நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை நடத்த வேண்டாம் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பேராயர் இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment