வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் நாளை (12) கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆகையால், வெப்பமான காலநிலையிலிருந்து பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் எந்த இடங்களிலும் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வழமையான நிலைமையை விடவும், தற்போது 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு பதுளை, யாழ்ப்பாணம், கட்டுகஸ்தோட்டை, நுவரெலியா மற்றும் வவுனியாவில் வழமையான நிலைமையை விடவும், தற்போது வெப்பநிலை 3 பாகை செல்சியஸ் அதிகரித்துக் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

No comments:

Post a Comment