கொட்டாவ, மஹல்வராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் ஜீப் வண்டியொன்றும் இன்று (12) காலை நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜீப் வண்டியில் பயணித்த 5 பேர் இந்த விபத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
மீகொடை பகுதியைச் சேர்ந்த 33, 36 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment