மோதலை விலக்க முற்பட்ட நபர் பலி - ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 2, 2019

மோதலை விலக்க முற்பட்ட நபர் பலி - ஒருவர் கைது

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி இம்புள்பிட்டிய கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (01) மாலை 05.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

நாவலபிட்டி இம்புள்பிட்டிய கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தமது உறவினர் ஒருவர் ஈடுபட்டதை தொடர்ந்து குறித்த நபர் மோதலை விலக்க முற்பட்ட போது மற்றுமொரு நபர் இவரை பிடித்து தள்ளியதால் குறித்த நபரின் தலைப்பகுதி சுவர் ஒன்றில் மோதி கீழே விழுந்து குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் 74 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் இராமசந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்று சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் 

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment