பிரித்தானிய இளவரசி சார்லட்டின் (Charlotte) பிறந்த தினத்தன்று, அவரது புகைப்படங்களை, அவரது தாயாரான கேட் மிடில்ட்டன் வெளியிட்டு வைத்துள்ளார்.
இளவரசி சார்லட் தனது 4 ஆவது பிறந்த தினத்தை இன்று (02) கொண்டாடும் நிலையிலேயே, அவரது தாயார் 3 புகைப்படங்களை வெளியிட்டு வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரியணைக்குரிய நான்காவது தலைமுறையான சார்லட், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 02 ஆம் திகதி, மேற்கு லண்டனிலுள்ள சென்.மேரிஸ் வைத்தியசாலையில் பிறந்துள்ளார்.
கேம்பிரிஜ் டச்சர்ஸ், தங்களது 3 பிள்ளைகளின் புகைப்படங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்ட்டனின் இளைய புதல்வாரன இளவரசர் லூயிஸின் முதலாவது பிறந்த தினத்தையொட்டி கடந்த வாரம் 3 புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment