கலவரங்களை ஏற்படுத்த முயல்வது பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுக்கும் - News View

About Us

About Us

Breaking

Monday, May 13, 2019

கலவரங்களை ஏற்படுத்த முயல்வது பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுக்கும்

நாட்டில் இனவாத மற்றும் மதவாத கலவரங்களை இச்சந்தர்ப்பத்தில் ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அழிக்கும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்குமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நோக்கம் தமது ஏனைய நாடுகளின் தமது ஷரியா சட்டத்துடன் கூடிய பிராந்தியங்களை அமைத்து கெலிபெட் இராச்சியம் ஒன்றை உருவாக்குவதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் தமது நோக்கங்களை தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்வதால் மாத்திரமல்ல நாட்டின் இன, மத பேதங்களை ஏற்படுத்தி நாட்டை பாதிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்கின்றார்கள். 

கடந்த சில நாட்களாக உலகில் பல நாடுகளிலும் முஸ்லிம் பள்ளிவாயல்கள் மீது குண்டுத் தாககுதல்களை நடத்தி இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்த இந்த பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றார்கள்.

வதந்திகளை நம்பி கலவரங்களை ஏற்படுத்தி அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணை வேண்டும். 

அவர் இதனை நேற்று 700 இலட்சம் ரூபா செலவில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமாராம வீரவில இளைஞர் மத்திய நிலையமொன்றுக்கு அடிக்கல் நாட்டும்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment