தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த நபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். 

குறித்த நபர் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக இதன்போது பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் குறித்த நபரிடமிருந்து தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment