கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டுள்ளனர். அதன்படி சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரிவினைவாத பரப்புரைகள் அடங்கிய இறுவட்டுகள், வோக்கிடாக்கி, மடிக்கணனி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களுடன் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கொட்டாஞ்சேனை மெசஞ்சர் வீதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment