சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும் இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில் ஆராய விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பிரிவின் மூலம், குற்றவாளிகளாக இனங்காணப்படும் நபர்களுக்கு 3 முதல் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment