நிந்தவூர் பிரதேச செயலக விசேட பாதுகாப்பு குழுக் கூட்டம் - 15 பேர் கொண்ட குழுவும் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

நிந்தவூர் பிரதேச செயலக விசேட பாதுகாப்பு குழுக் கூட்டம் - 15 பேர் கொண்ட குழுவும் நியமனம்

நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவின் விசேட பாதுகாப்பு குழுக் கூட்டம் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ. பைசல் காசீம் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது நிந்தவூர் பிரதேசத்தில் அண்மையில் தீவிரவாத குழுக்களினால் ஏற்பட்ட சம்பவங்கள், வாடகைக்கு வீடு வழங்குதல், பிரதேசத்திற்கு வரும் புதிய நபர்கள், பள்ளிவாசல்கள், திணைக்களங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் உட்பட மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது முற்றாக ஒழிக்க நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைமையில் ஜம்மியத்துல் உலமா சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம், பள்ளிவாசல்கள், இளைஞர்கள், சமூக அமைப்புக்கள், தொழில் தொண்டு அமைப்புக்கள் உள்ளிட்டவற்றிலிருந்து 15 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சுலைமாலெவ்வை, நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் பாறூக் இப்றாகீம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள், அமைப்புகளின் பிரதநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment