80,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். களனிய - கோனவல பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறு அளவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன கூறினார்.
காசோலை மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்காக சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியமை தெரியவந்துள்ளது.
குறித்த தொகையில் 20,000 ரூபாவை ஏற்கனவே பெற்றுக் கொண்ட சந்தேகநபர் எஞ்சிய 80,000 ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment