அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் 2015 ஜனவரி முதல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையுடன் ஆக்கபூர்வமாக செயற்படுவதாக உயர் ஸ்தானிகர் பல முறை கூறியிருக்கிறார். எவ்வாறாயினும் இந்த ஆக்கபூர்வமான கூட்டிணைவு மூலம் முக்கிய அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் 2017 மார்ச்சில் கூறுகிறார்.
மனித உரிமைகள் கவுன்சிலின் 30/1 என்ற தீர்மானத்தின் கீழ் செய்யப்பட்ட தற்காலிகமான சட்டக் கடப்பாடுகள் ஒரு வருடத்துக்கு மேலாக நிறுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. நம்பிக்கையை கட்டியெழுப்பும் சில நடவடிக்கைகள் மூலமான முன்னேற்றம் போதுமானதாக இல்லை. என்பதுடன் அது முடிவில்லாமலும் உள்ளது. அத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொண்ட கட்டமைப்பு ஒன்றுதிரட்டப்படவில்லை என்பதுடன் இதனை முன்னகர்த்துவதற்கு போதுமான அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை.
இலங்கையில் இடம்பெறும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளாக காணப்படும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பாக இரட்டை நடைமுறை பின்பற்றப்படும் சட்ட முறைமையையே காண முடிகிறது. 2017 செப்டம்பர் 7 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு வழக்கு மனித உரிமை மீறல் பற்றியது அல்ல. ஆனால் அரசாங்க அதிகாரிகளின் மீதான ஒரு மோசடி வழக்கு, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவர்.
அதில் ஒருவர் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர். மற்றவர் தொலைத்தொடர்புகள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம். அவர்கள் இருவரும் சிறைக்குச் சென்ற சில மணி நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சுகவீனமுற்றதால் அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாதாரண கைதிகள் தமக்கு சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவது கூட சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 20 ஆம் திகதி மேற்படி குற்றவாளிகள் இருவரும் ‘விதி விலக்கான சூழலின் கீழ்’ அவர்களை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுவிக்கிறார். அவர்களுக்கான மூன்று வருட சிறைவாசத்தில் 13 நாட்கள் மட்டுமே அவர்கள் சிறையில் இருந்துள்ளனர்.
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் 10 வருடங்களுக்கு மேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அதற்கு மேலும் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேற்படி அரச அதிகாரிகள் மீது சலுகை காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் வெளியிடப்பட்ட கூற்று மற்றும் அறிக்கைகளில் பொறுப்புக் கூறல் மற்றும் சீர்திருத்தம் தொடர்பான முன்னேற்றம் போதாதிருப்பது பற்றிய தனது கருத்தை உயர் ஸ்தானிகர் பதிவுசெய்கிறார். பொதுவான மனித உரிமைகள் நிலைப்பாட்டின் சாதக அபிவிருத்தியை ஊக்கப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறெனினும் 2017 இல் இடைக்கிடை இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதல்கள், பதற்றம் மற்றும் சிறுபான்மையோர் மீதான தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்படடதாகத் தெரியவில்லை. கவலைதரும் இவ்வாறான பலவற்றை அரசாங்கத்துக்கு சாதகமான வழியில் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
இதுபோன்ற வன்முறைகள் 10 வருடங்களுக்கொருமுறை என்ற வகையில் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது. வெறுப்பு பேச்சு, சமூக ஊடகங்களுக்கூடான தவறான தகவல் வழங்கல் மற்றும் அரசியல் கையாளல் ஆகியவை இதற்கு துணைபோகின்றன.
சித்திரவதை மற்றும்கடுமையான கண்காணிப்பு மற்றும் முக்கியமான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் போதிய முன்னேற்றம் இல்லாமை உதாரணத்துக்கு காணி கையளிப்பு, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல் மற்றும் அச்சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ள வழக்குகள் ஆகியவை அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை முன்னெடுக்கும் அம்சங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.
இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முக்கிய விடயத்தில் மனித உரிமை கவுன்சில் தொடர்ந்து சீரிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் வலியுறுத்துகிறார். அதேநேரம் அங்கத்துவ நாடுகள் வேறு மார்க்கங்களையும் பரிசீலிக்க வேண்டும். சர்வதேச நீதி முறை உள்ளிட்ட வழிமுறைகள் பொறுப்புக்கூறலை மேம்படுத்த முடியுமா என்பதை அவை பரிசீலிக்க வேண்டும் என்று உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment