எதிர்க் கட்சியினர் பின்னால் இருந்து முதுகில் குத்துவது போன்று செயற்படுகின்றனர் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

எதிர்க் கட்சியினர் பின்னால் இருந்து முதுகில் குத்துவது போன்று செயற்படுகின்றனர் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

எதிர்க் கட்சியினர் மீது நம்பிக்கை வைத்தமையாலேயே இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் தோல்வியடையவேண்டி ஏற்பட்டது.

எதிர்க் கட்சியினர் பின்னால் இருந்து முதுகில் குத்துவது போன்று செயற்படுவதாக பொது நிறுவனங்கள், கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டினார். 

'எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஓர்கிட்’ மலர்ச் செய்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (31) கண்டி தபால் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் வாக்கெடுப்புக்குச் செல்வதில்லையென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். இது விடயத்தில் அவர்களை நம்பியதாலேயே இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையவேண்டி ஏற்பட்டது என்றார்.

இருப்பினும் அவற்றை மீளவும் பாராளுன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற முடியும். எதிர்க் கட்சியினர் பின்புறமாக இருந்து கத்தியால் குத்துவது போன்ற செயற்பாடுகளைச் செய்வதில் திறமையானவர்களாக இருக்கின்றனர். 

கடந்த வருட இறுதியிலும் இவ்வாறு பின்புறமாகவிருந்து கத்தியால் குத்தும் செயல்களை அரங்கேற்றியிருந்தனர். அதேபோலவே கடந்த வியாழக்கிழமையும் பாராளுமன்றத்தில் நடந்து கொண்டனர் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தமை இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தொண்டமான் அமைச்சராகவிருந்த போது அவருடைய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடையச் செய்யப்பட்டிருந்தன என்றார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment