பயணிகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கான தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

பயணிகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கான தொலைபேசி இலக்கம்

பொது போக்குவரத்து பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் பயணிகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கான நடவடிக்கையாகும்.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இலக்கம் 011 2860860 என்பதாகும். கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் இந்த தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற முறையில் பஸ் வண்டிகளை செலுத்துதல் அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment