மிரட்டினார் ஹக்கீம், பின்வாங்கினார் ரணில் ! கல்முனை பிரதேச செயலக விடயம் நடக்காதென தகவல்..! - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

மிரட்டினார் ஹக்கீம், பின்வாங்கினார் ரணில் ! கல்முனை பிரதேச செயலக விடயம் நடக்காதென தகவல்..!

கல்முனை உப பிரதேச செயலகத்தை செயலகமாக தரமுயர்த்தும் நடவடிக்கையின்போது அரசு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விருப்பை மீறிச் செயற்படாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத் கட்டிடத் தொகுதியில் மு. காவுடன் நடத்திய சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

இந்த பேச்சு நடந்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் முன்னிலையில் சுமந்திரன் எம்பியை தொலைபேசியில் அழைத்த ரணில் இனி இந்த விடயம் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசி ஒரு இணக்கத்திற்கு வருவதே நல்லதென தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையுடன் அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் குறித்து இந்த சந்திப்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், இதனை உடனடியாக நிறுத்துவதா அல்லது முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை இழப்பதா என்பதனை பிரதமர் தீர்மானிக்க வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசின் வரவு செலவுத் திட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு செல்ல வேண்டாமென முஸ்லிம் காங்கிரசை கேட்டுக் கொண்ட பிரதமர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுபற்றி தாம் பேசுவாரென தெரிவித்தே சுமந்திரனை உடனடியாக தொலைபேசியில் அழைத்து உரையாடியதாக தகவல்.

அதேசமயம் இருதரப்புடன் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டுமென்பதை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் பணிப்பதாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைய நிலைமைப்படி கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை கிடப்பில் போடப்படலாம் என்றே உள்ளக தகவல்கள் சொல்கின்றன.

சிவா ராமசாமி
சிரேஷ்ட ஊடகவியலாளர்

No comments:

Post a Comment