அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளது - அமைச்சர் அகில விராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 12, 2019

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளது - அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பொருளாதாரம் பற்றி பேசுபவர்கள் ஏன் 2017ம் ஆண்டு வரை அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாமல் 2014ம் ஆண்டிலேயே விட்டு விட்டுப் போனார்கள் என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார். 

உண்மையில் அவர்களது காலத்தில் பொருளாதாரம் ஸ்திரமெனக் காட்டப்பட்டதேயொழிய பெரும் நெருக்கடியினாலேயே இரண்டரை வருடங்களுக்கு முன்பதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெயியேறினார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியிகையிலேயே அமைச்சர் இவவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தற்போது நாடடில் எதுவுமே நடக்கவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

நாட்டில் சகல அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பிரிவினரது சம்பளம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. 

கல்வித்துறையைப் பொருத்தவரை 3000 விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு 90 வீதம் மின்சாரம் மற்றும் பொது வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. 4000 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மாதங்களில் வழங்கப்படவுள்ளன.

நாட்டில் முதற்தடவையாக 48 மருந்துப் பொருட்களின் விலைகள் ஒரே தடவையில் குறைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார சேவையில் மக்களுக்குப் பெரும் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. 

நாட்டு மக்களுக்குப் பல வழிகளிலும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறப்பு நன்மைகளை நாடு பெற்று வருகிறது. 

கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டு பெருமளவிலான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை மக்கள் சரியாக கணக்குப் பார்ப்பர். அதன் பின் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை அவர்கள் எடுப்பர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment