முகம்மத் றிழா
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சுற்றாடலை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சபையின் அதிகாரப் பரப்பிலுள்ள தேர்வு செய்யப்பட்ட பொது நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல், மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மாஞ்சோலை அல் மினா வித்தியாலயம், வாகனேரி கோகுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வாகேனிரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் சுற்றாடலை அழகுரச் செய்யும் வகையில் இந்நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி), செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
வாகனேரி பிரதேசத்தில் மர அழிப்பைத்தடுத்து இயற்கையை உருவாக்கும் ஆரம்ப முயற்சியாக சபை உறுப்பினர்களான வை.யோகேஸ்வரன், ரீ.கிருபைராசா ஆகியோருக்கும் இதன்போது தவிசாளரினால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஜனாதிபதியின் விசேட கருத்திட்டத்தின் கீழ், வன உருவாக்கத்திற்கான உபகருத்திட்டங்களை மையமாக் கொண்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சுற்றாடலை அழகுபடுத்தும் மரக்கன்றுகளை பிரதேசம் எங்கும் நடல் எனும் விசேட வேலைத்திட்டம் இவ்வருட முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
No comments:
Post a Comment