தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) மூலமாக நடத்தப்பட்டு வந்த தகவல் தொழில் நுட்ப (ஐ.சி.ரி) பயிற்சி நெறி நிறுத்தப்படவுள்ளதாக எனக்கு பலராலும் தகவல்கள் தரப்பட்டன என மேற்படி சபையின் தலைவர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இப்பயிற்சி நெறியில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு இப்பயிற்சி நெறி தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் கூடிய விரைவில் அனைத்துத்தர பயிலுநர்களுக்கும் அடிப்படை அறிவை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்நெறியிலுள்ள பாட விதானங்களில் மறுசீரமைப்பு செய்து அந்த பயிற்சி நெறியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நைற்றா நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் சேவைகள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய நிறுத்தப்பட்ட பயிற்சிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது ஐ,சி.ரி. பயிற்சிநெறி குறித்து விளக்கம் கோரப்பட்டது.
அதற்கமைய ஐ.சி.ரி. பயிற்சி நெறியில் மேற்கொள்ளப்பட்ட பாடவிதானங்களின் அடிப்படையில் அவற்றை பெற்றுக் கொள்பவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள் அருகி காணப்படுகின்றமை காரணமாக இதற்கான மாற்று வழிமுறைகளை கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ற வகையில் இந்த பாட நெறியிலுள்ள புதிய பாட விதானங்களை அறிமுகம் செய்து இதனை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் எனது வழிநடத்தலில் இப்பாடநெறி தொடரும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment