விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்! - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மரின் விடுதலைக்காக அரும்பாடுப்பட்டவர்களுக்கு விடுதலையான மாணவர்களும் பெற்றோர்களும், நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

தங்களது விடுதலைக்கு உதவிகளை செய்தமைக்காக அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களை அவரது அமைச்சில் நேற்றிரவு (07) சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்தனர்.

விடுதலைக்காக உதவிய அமைச்சருக்கு மாத்திரமன்றி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டப்பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி சப்ராஸ் அபூபக்கர் ஆகியோருக்கும் அவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களை பார்வையிட அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் இஷாக் ரஹ்மான் எம்.பி ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment