விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (31) மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எல்.அலியார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மீராவோடை மேற்கு வட்டாரக்குழுத் தலைவரும் அமைச்சரின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் மற்றும் உலமாக்கள், ஊர் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment