1990 சுவசெரிய அம்பியுலென்ஸ் சேவை மத்திய நிலையத்தை இன்று (01) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.
ராஜகிரியவில் உள்ள சுவசெரிய அம்பியுலென்ஸ் மத்திய நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, அதன் செயற்படுத்தல் பிரிவின் பணிகளை பார்வையிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக 2016ஆம் ஆண்டு கட்டணமின்றி ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை சேவையாக 1990 சுவசெரிய அம்பியுலென்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சேவை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதியுடன் இங்கு பிரசன்னமாகியிருந்தார்.
No comments:
Post a Comment