இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 2, 2019

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் இன்று மாலை அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின் படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவானது.

மென்ட்டாவாய் மாவட்டத்திற்குட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இவ்விரு நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்த வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

No comments:

Post a Comment