சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது. நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்yலாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது.
குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment