இரத்மலானையில் போலி பண அட்டைகளைக் கொண்டு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட மேற்படி படத்திலுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்நபர் ஏ.ரி.எம் இயந்திரத்தின் பண அட்டையைச் செலுத்தும் பகுதியில் மேலுமொரு சட்டவிரோத இலத்தினியல் உபகரணத்தை இரகசியமாக பொருத்தி வைத்துள்ளார்.
பின்னர் வாடிக்கையாளர்கள் தமது பண அட்டையை அதனுள் இட்டு இரகசிய குறியீட்டை அழுத்தியதன் பின்னர் இந்நபர் மீண்டும் அதேபோன்றதொரு போலியான அட்டையை தயாரித்து வெளிநாட்டில் வைத்து பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளார். இவரை உடனடியாக கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment