கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் பொட்டா (Puss Poddaa) எனப்படும் பாதாள உலகக்குழு தலைவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக இன்று கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் உதவியாளர்களா என்பது தொடர்பிலும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் 11 பேரிடமும் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment