11 கிலோ தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவப் பகுதியில் வைத்து தங்க பிஸ்கட்களுடன் இரு உள்ளுர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (சனிக்கிழமை) குடாவெ பகுதியில் சந்தேகத்திடமான இயந்திரப் படகு ஒன்றை கற்பிட்டி விஜய ரெஜிமெண்ட் கடற்படையினர் சோதனை செய்த போதே இந்த தங்கக் கடத்தல் பிடிபட்டுள்ளது.
இதன்போது, இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 86,295,000 ரூபாய் பெறுமதியான 11.506 கிலோ கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்களையும் இயந்திரப் படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது, உள்ளுர் மீனவர்களான கற்பிட்டியைச் சேர்ந்த எம்.எம்.மஞ்சுளா நிஷாந்த (வயது-33), ஆர்.எம்.எஸ்.அந்தோணி (வயது-28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்களை கடற்படையினர் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment