நீர்கொழும்பில் நாய் எரியூட்டி கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

நீர்கொழும்பில் நாய் எரியூட்டி கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளது. லெப்ரடோ (labrador) இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment