கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானதும் தோட்ட கம்பனி பங்குகளில் வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானதும் தோட்ட கம்பனி பங்குகளில் வீழ்ச்சி

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளத்தை அதிகரிக்க பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்கிய நிலையில் பங்குச் சந்தையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன. 

இந்த சம்பள அதிகரிப்பினால் ஒவ்வொரு கம்பனியும் வருடமொன்றுக்கு சராசரியாக 350 மில்லியன் முதல் 450 மில்லியன் வரையில் சம்பளங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாக பெருந்தோட்ட தொழில்துறையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். 

சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் பட்டியலிடப்பட்ட 18 பெருந்தோட்ட கம்பனிகளில் 10 கம்பனிகளின் பங்குகள் சரிவைக் காண்பித்தன. தலவாக்கலை பெருந்தோட்டம், உடபுசல்லாவ பெருந்தோட்டம், பொகவந்தலாவ பெருந்தோட்டம் ஆகியவற்றின் பங்குகள் சரிவைக் காண்பித்தன. 

பெருந்தோட்டக் கம்பனிகளில் தலா 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானவர்கள் பணியாற்றிவரும் நிலையில் ஒவ்வொரு கம்பனியும் தலா 350 மில்லியன் முதல் 450 மில்லியன் ரூபா வரையில் சம்பள உயர்வை வழங்க வேண்டியிருப்பதாக கம்பனிகளின் பேச்சாளர் குறிப்பிட்டார். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 20 கம்பனிகளில் ஏறத்தாழ 154,000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் படி 9 மில்லியன் ரூபா வரையில் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

எனினும், 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 20 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டிருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக வழங்கப்பட்டதுடன், உற்பத்தி ஊக்கக்கொடுப்பனவாக 140 ரூபாவும், விலைக் கொடுப்பனவாக 60 ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 60ரூபாவுமாக மொத்தச் சம்பளம் 730 ரூபா வழங்கப்பட்டது.

எனினும் 2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன், விலைக் கொடுப்பனவு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை உற்பத்தி ஊக்குக் கொடுப்பனவு, வருகைக் கொடுப்பனவு என்பன நீக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment