அண்ணன் தம்பி மோதலில் அண்ணன் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

அண்ணன் தம்பி மோதலில் அண்ணன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் மற்றைய சகோதரன் காயமடைந்துள்ளார். 

காசு பிணக்கு காரணமாக யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது. 

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் , அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்.பிரதீபன்

No comments:

Post a Comment