ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா உச்ச வரம்பிற்கு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா உச்ச வரம்பிற்கு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம்

ஏப்ரல் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 

இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் சிறிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் விவசாய அமைச்சு அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதன்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஒரு கிலோ நெல்லின் விலையைப் போன்று இருமடங்கு விலைக்கு அரிசியை விநியோகிக்கலும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்னர். 

இந்தக் கூட்டத்தில் பெரும்போக அறுவடை நெல்லை விலைகொடுத்து வாங்கும் நடைமுறையில் அரசாங்கத்தின் உத்தரவாத விலைப்பட்டியலை தத்தமது களஞ்சியசாலைகளில் காட்சிப்படுத்த ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தார்கள். 

இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும். 

அரச தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment