மார்ச் 01 முதல் சீகிரியாவில் பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்களுக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

மார்ச் 01 முதல் சீகிரியாவில் பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்களுக்கு தடை

சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை மார்ச் 01ம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது. 

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிதியம் கூறியுள்ளது. 

அதன்படி எதிர்வரும் 01ம் திகதி முதல் அந்தப் பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து வருவது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பணயிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

அந்த உணவு வகைகளை அவை அடைக்கப்பட்டுள்ள பொலித்தீன் உரைகள் நீக்கப்பட்ட பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று சீகிரிய வேலைத்திட்ட முகாமையாளர் மேஜர் எம்.எம். நிஷாந்த கூறினார்.

No comments:

Post a Comment