டெங்கு நோயி பரவும் ஆபத்து, யாழ். மாநகர சபை அசமந்தம் - முன்னாள் யாழ். முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

டெங்கு நோயி பரவும் ஆபத்து, யாழ். மாநகர சபை அசமந்தம் - முன்னாள் யாழ். முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றச்சாட்டு

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் ஒன்று சபையால் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலை காணப்படுவதால் மீண்டும் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

ஆனால் யாழ் மாநகரின் தற்போதைய ஆட்சியாளர்கள் அது தொடர்பாக எதுவித முன்னெச்சரிக்கை செயற்பாடுகளையும் மேற்கொள்ளமுடியாத ஆளுமையற்றவர்களாக உள்ளனர். இதனால் இந் நோயின் தாக்கம் எல்லை மீறிச் செல்லும் நிலை உருவாகவுள்ளது என யாழ் மாநகரின் முன்னாளர் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது. இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடபகுதியில் பருவமழை தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது. யாழ்.மாநகரசபையின் பல பாகங்களிலும் பல்வேறு நீர்வடிகான்கள் குப்பைகளுடன் நிரம்பிக் காணப்படுகின்றன. இது நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க ஏதுவான நிலைமைகளை மாநகரசபை உருவாக்கியுள்ளதாகவே எண்ணமுடிகின்றது.

அதுமட்டுமல்லாது யாழ் மாநகரிற்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் தற்போது அதிகதித்துள்ளது. பலர் யாழ் போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று அந்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால் கடந்த வரவு-செலவு திட்டத்தில் கூட இதற்கான விசேட திட்டங்கள் எதுவும் யாழ் மாநகரசபையால் உள்வாங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இந்த அசமந்த போக்கு ஏன்?

பொது இடங்கள் மற்றும் மக்களுடைய வீடுகளுக்கு சென்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சூழல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் அது அறிக்கை வடிவில் தான் உள்ளதே தவிர நடைமுறையில் காணப்படுவதாகவோ அன்றி அதை முன்னின்று அதற்கான துறை சார்ந்த தரப்பினர் நடத்துவதாகவோ இல்லை என்றே அறிய முடிகின்றதுது.

இதனிடையே “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் வருகின்றநிலை காணப்படுகின்றது.

மாநகரை அழகுபடுத்துவோம் என்று கூறி ஆட்சியை கைப்பற்றியவர்கள் தற்போது அதற்கான எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் முயற்சிகளை கூட செய்யாதிருப்பது வேதனையளிக்கிறது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment