கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்திலயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் வாழ்த்து செய்தியில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தான் கற்ற பாடசாலைகளுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ள மாணவர்களுக்கு என் இதயம் கணிந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டோம் நாம் எதிர்பார்த்த பெறுபேருகள் கிடைக்க வில்லை என்று மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்து அடுத்த முறை சிறந்த பெறுபேருகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுவதுடன் உங்கள் அனைவரினதும் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது பிராத்தனைகள் என்றும் இருக்கும் என்றும் அவ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment