பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த மனுவை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment