2018 தேசிய உடல் கட்டழகராக இராணுவ வீரர் சம்பத் மகுடம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

2018 தேசிய உடல் கட்டழகராக இராணுவ வீரர் சம்பத் மகுடம்

இலங்கை உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டுச் சம்மேளனம் ஏற்பாடு செய்த 71 ஆவது மிஸ்டர் ஸ்ரீலங்கா உடல் கட்டழகர் போட்டியில் 90 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எச்.பீ.எஸ் சம்பத் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றார். 

இவ்வருடத்துக்கான தேசியஉடல் கட்டழகர் போட்டிகள் கடந்தவார இறுதியில் ஹொரணை ஸ்ரீபாலி மண்டபகேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கானநடைபெற்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 100 இற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன்,பெண்களுக்காக இடம்பெற்ற உடல் கட்டழகர் போட்டிகள் இம்முறைமுக்கிய இடத்தை வகித்தன. 

இதேநேரம், இரண்டாமிடத்தை 65 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இராணுவத்தைச் சேர்ந்த அமில வென்றதுடன், மூன்றாமிடத்தை 80 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டகடற்படையைச் சேர்ச்ததிலூப டயஸ் பெற்றுக் கொண்டார். 

இந்தநிலையில்,மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தைவென்ற சம்பத்துக்கு 2 இலட்சம் ரூபா பணப்பரிசும், 2 ஆவது மற்றும் 3ஆவது இடங்களுக்குஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாமற்றும் ஒரு இலட்சம் ரூபாபணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன. 

இது இவ்வாறிருக்க. கனிஷ்ட பிரிவு வீரர்களுக்காக இடம்பெற்ற போட்டியில் முதலிடத்தை 70 கிலோகிராமுக்கு உட்பட்ட எடைப் பிரிவில் போட்டியிட்டவர் ரிக்ரெட் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.கே இளங்ககோன் பெற்றுக் கொள்ள, பெண்கள் பிரிவு சம்பியன் பட்டத்தை உனவட்டுன பிட்னஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லக்மினி தனதாக்கினார். 

அத்துடன், 50 வயதுக்கு மேற்பட்ட சிரேஷட வீரர்களுக்காக நடைபெற்ற போட்டியில் எஸ்.ஜே பிட்னஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிஷாந்த பெரேரா சம்பியனாகத் தெரிவானார். இதேவேளை, 6 எடைப் பிரிவுகளுக்காக நடைபெற்ற இம்முறை போட்டிகளில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் அதிகளவு கௌரவத்தைப் பெற்று ஒட்டு மொத்த சம்பியனாகவும் தெரிவாகியது. 

இந்நிகழ்விற்கு ஹொரணை பிரதேச சபையின் தலைவர் அசோக ரணதுங்க, இலங்கை உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டுச் சம்மேளனத்தின் தலைவர் கித்சிறி பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment