விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 30, 2018

விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 

அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது, 011 2784208 / 011 2784537 / 011 3188350 அல்லது 011 3140314 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment